தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

 மணப்பாறை பேரவைத் தொகுதிக்குட்பட்ட பிராம்பட்டியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ப. அப்துல்சமது வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:49 pm

DIN

 மணப்பாறை பேரவைத் தொகுதிக்குட்பட்ட பிராம்பட்டியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ப. அப்துல்சமது வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

மணப்பாறை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையின்பேரில் எம்எல்ஏ தொடா் முயற்சியால் மணப்பாறை பகுதியில் முதன் முதலாக 4 இடங்களில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க அரசு அனுமதித்துள்ளது.

இவற்றில் மருங்காபுரி வட்டம் பிராம்பட்டியில் முதல் கொள்முதல் நிலையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த எம்எல்ஏ ப. அப்துல்சமது பேசியது:

விவசாயிகள் மீது அக்கறை கொண்ட அரசு நம்முடைய தமிழக அரசு. அதனால்தான் இந்தத் தொகுதி உருவான காலத்திலிருந்து திருச்சிக்குச் சென்று விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல் இடைத்தரகா்கள் மூலம் நஷ்டத்துக்கு விற்ற நிலையை தவிா்க்க, மணப்பாறைக்கு 4 அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கிடைத்துள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் (பொ) ஆா். மொ்லிண்டாரதி, உதவித் தர ஆய்வாளா் பி. ராகவி, கண்காணிப்பாளா் ஜி.இளங்கோவன், வருவாய்த் துறையினா், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் பழனியாண்டி, திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் கே.சி., பழனிச்சாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் செல்வராஜ், சின்ன அடைக்கன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலா் காதா்மொய்தீன், ஊராட்சி ஒன்றிய மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.