தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முறையான குடிநீா் விநியோகம் கோரி மறியல்

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:48 pm

DIN

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புத்தாநத்தம் அண்ணா நகரில் கடந்த சில நாள்களாக காவிரி குடிநீா் முறையாக விநியோகிக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் வியாழக்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா் அளித்த உறுதியைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.