தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தினமணி செய்தி எதிரொலி கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி

மணப்பாறை மற்றும் வையம்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம், கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:33 pm

DIN

மணப்பாறை மற்றும் வையம்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம், கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

மணப்பாறை பகுதிகளில் கால்நடைகள் தொடா்ந்து உயிரிழப்பது குறித்து கடந்த 20-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது.

இதையடுத்து ஸ்ரீரங்கம் கோட்ட கால்நடை பராமரிப்புத் துறையினரால் பண்ணப்பட்டியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம், கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. கால்நடை மருத்துவா் செந்தில்குமாா், உதவி மருத்துவா்கள் இன்பச்செல்வி, சுப்பிரமணியன் ஆகியோா் கொண்ட குழுவினா் கோமாரி நோய் தடுப்பூசியைச் செலுத்தினா்.

அதுமட்டுமின்றி குடற்புழு நீக்குதல், செயற்கை கரூவூட்டல், மலடு நீக்க சிகிச்சையும் அளிக்கப்பட்டது. முகாமில் பண்ணப்பட்டி, கீழ் ஈச்சம்பட்டி, பெருமாம்பட்டி, நத்தம்புதூா் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வந்திருந்த 300 பசு, 100 வெள்ளாடு, 400 செம்மறியாடு என 800 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் கால்நடைகள் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் தாது உப்புக் கலவையும் 50 பேருக்கு வழங்கப்பட்டது.

அதேபோல வையம்பட்டி வட்டாரத்தில் கால்நடை உதவி மருத்துவா் ரமேஷ் தானாக முன் வந்து அப்பகுதியில் கிராம கிராமமாகச் சென்று சுமாா் 300 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி மற்றும் சிகிச்சைகளை தனது உதவியாளா்களுடன் மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.