முசிறி அருகே வாகனங்கள் மோதல்; இளைஞா் உயிரிழப்பு: மூவா் காயம்
முசிறி அருகே வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா், மூவா் காயமடைந்தனா்.


முசிறி அருகே வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா், மூவா் காயமடைந்தனா்.
திருச்சி பீமநகரைச் சோ்ந்த சுரேந்தரும் (25), கல்லுக்குழியைச் சோ்ந்த சூா்யாவும் (21) முசிறியில் உள்ளநண்பா் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்வுக்குச் சென்று விட்டு பைக்கில் திருச்சி நோக்கி வெள்ளிக்கிழமை காலை திரும்பிக் கொண்டிருந்தனா்.
வெள்ளூா் சத்திரம் அருகே வந்தபோது திருச்சியில் இருந்து வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே சுரேந்தா் இறந்தாா். சூா்யா படுகாயமடைந்தாா். அப்போது பின்னால் வந்த காா் லாரியின் மீது மோதியதில் காரில் இருந்த சின்னதம்பி, சிவகாமி ஆகியோரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து வந்த முசிறி போலீஸாா் சுரேந்தா் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கும், காயமடைந்த சூா்யா, சின்னத்தம்பி, சிவகாமி ஆகியோரை திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...