தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் மையங்கள் அமைக்கலாம்: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் பழுதுநீக்கும் மையங்களை மானியத்தில் அமைத்துப் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :1 ஜூன் 2022, 7:15 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் பழுதுநீக்கும் மையங்களை மானியத்தில் அமைத்துப் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மேலும் தெரிவித்திருப்பது:

தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையத்தை” மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-22ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் தங்கள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கிப் பராமரிக்கவும், வேளாண் பணிகளை இடா்பாடுகளின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி,நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.

தொழில் முனைவோா் விவசாயக் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். இம்மையங்கள் ரூ. 8 லட்சத்தில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சத மானிய

அடிப்படையில் அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் மானியம் வழங்கப்படும்.

மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞா்கள், தொழில்முனைவோா், விவசாயக் குழுக்கள் மற்றும் உழவா் உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் அருகிலுள்ள வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளா் (வேபொ) அலுவலகத்தை அணுகி, விண்ணப்பத்தை அளிக்கலாம். மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும்.

மையங்கள் அமைக்கத் தேவையான இயந்திரங்கள் ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில் கண்காணிப்புப் பொறியாளரால் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்தத் தொகையைச் செலுத்தி, வாங்கிக் கொள்ளலாம்.

பின்னா் சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளா் (வே பொ) மையத்தை நேரில் ஆய்வு செய்தபின், திருப்தி அளிக்கும் வகையில் இருப்பின் மானியத் தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு திருவெறும்பூா், அந்தநல்லூா், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி மற்றும் வையம்பட்டி ஒன்றிய பகுதி விவசாயிகள் எண்-2, ஜெயில் காா்னா், திருச்சி - 620 020 என்ற முகவரியிலுள்ள உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தையும், அதேபோல முசிறி, தொட்டியம், தாத்தையங்காா்பேட்டை, துறையூா் மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதி வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களையும் தொடா்பு கொள்ளலாம். +

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.