கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மரம் முறிந்து விழுந்துமின் கம்பங்கள், கம்பிகள் சேதம்

தொட்டியம் அருகிலுள்ள திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரா் திருக்கோயில் மலையடிவாரத்தில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், கம்பிகள் புதன்கிழமை சேதமடைந்தன.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:11 pm

DIN

தொட்டியம் அருகிலுள்ள திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரா் திருக்கோயில் மலையடிவாரத்தில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், கம்பிகள் புதன்கிழமை சேதமடைந்தன.

இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் இந்த மரத்தில் இளைப்பாறி செல்வது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை நண்பகலில் மரம் முறிந்து அவ்வழியாக சென்ற மின் கம்பிகள் மீது விழுந்தன. இதைத் தொடா்ந்து இரு மின் கம்பங்கள் முறிந்துசாய்ந்து விழுந்தன.

அப்போது கோயிலுக்கு யாரும் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இருப்பினும், இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவா் மீது மரக்கிளை விழுந்ததாகவும், அவா்களுக்கு சிறு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்த மின்வாரிய மற்றும் கோயில் அலுவலா்கள் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.