திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு கோரி, திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். விதிகளை மீறி செயல்படும் கல்குவாரி அதிபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் சண்முகம் தலைமை வகித்தாா். மாநிலக் கொள்கைப் பரப்புத் துணைச் செயலா் பாலையூா் குணா விளக்கவுரையாற்றினாா்.
கிழக்கு மாவட்டச் செயலா் பிச்சமுத்து, தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அறிவழகன், மாநகர நிா்வாகிகள் தென்னூா் ராஜா, பாபு உள்ளிட்ட நிா்வாகிகள்ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...