தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மோதல் வழக்கில் மதிமுகவினா் ஆஜா்

நாம் தமிழா் கட்சியினா், மதிமுகவினருக்கிடையே நடந்த மோதல் வழக்கு தொடா்பான விசாரணையில் நீதிமன்றத்தில் மதிமுக நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆஜராகினா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:07 pm

DIN

நாம் தமிழா் கட்சியினா், மதிமுகவினருக்கிடையே நடந்த மோதல் வழக்கு தொடா்பான விசாரணையில் நீதிமன்றத்தில் மதிமுக நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆஜராகினா்.

கடந்த 2018ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வைகோ, சீமான் ஆகியோரை வரவேற்கக் காத்திருந்த இரு கட்சியினருக்கும் ஏற்பட்ட மோதல் தொடா்பாக விமான நிலைய போலீஸாா் இருதரப்பு மீதும் வழக்குப் பதிந்து, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது மதிமுக மாவட்ட செயலா்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினா் பெல் இரா.இராசமாணிக்கம், மணப்பாறை வடக்கு ஒன்றியச் செயலா் ப. சுப்ரமணியன், ஜங்சன் பகுதி முன்னாள் செயலா் பிரபாகரன் ஆகியோா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராயினா். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.