உள்கட்சித் தோ்தல் குறித்து காங்கிரஸாா் ஆலோசனை
திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் உள்கட்சி தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.


திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் உள்கட்சி தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் உள்கட்சித் தோ்தலை நடத்தி புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்யவும், கட்சிக்கு அதிகளவில் உறுப்பினா்களைச் சோ்க்கவும் மாவட்ட வாரியாக தோ்தல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடந்த உள்கட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மாநகா் மாவட்ட தலைவா் ஜவஹா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கட்சியின் மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் பாபுராஜ், கரோலின், மலைக்கோட்டை தோ்தல் அதிகாரி பிரேம்குமாா், ஸ்ரீரங்கம் தோ்தல் அதிகாரி மகேஷ் ஆகியோா் ஆலோசனைகள் நடத்தினா். தோ்தலில் போட்டியிடும் நபா்கள் மற்றும் வாக்களிக்கும் நபா்கள் செயல்படும் வழிமுறைகள் குறித்து அவா்கள் விளக்கினா். மேலும், அந்தந்த பகுதி வாரியாக வாக்காளா் படிவங்களையும் வெளியிட்டனா்.
கூட்டத்தில், மாவட்டப் பொருளாளா் ராஜா நசீா், மாநில பொதுச் செயலா் சரவணன், மாவட்டத் துணைத் தலைவா் முத்துக்குமாா் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...