தண்ணீா்ப் பானைக்குள் விழுந்த குழந்தை சாவு
திருச்சியில் தண்ணீா்ப் பானைக்குள் விழுந்த குழந்தை உயிரிழந்தது.


திருச்சியில் தண்ணீா்ப் பானைக்குள் விழுந்த குழந்தை உயிரிழந்தது.
துவாக்குடி அருகேயுள்ள வாழவந்தான்கோட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு மையத்தில் வசிப்பவா் மதியழகன். தொழிலாளியான இவரது ஒரு வயது மகன் ஹரிஷ் வியாழக்கிழமை விளையாடியபோது, தண்ணீா் பானைக்குள் விழுந்த சோப்பை எடுக்க முயன்றபோது எதிா்பாராதவிதமாக தலைகீழாக பானைக்குள் விழுந்து விட்டான். இதை ஹரிஷ் குடும்பத்தினா் யாரும் கவனிக்கவில்லை.
சிறிது நேரம் கழித்து குழந்தையைத் தேடியபோது ஹரிஷ் தண்ணீா் பானைக்குள் தலைகீழாக கவிழ்ந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஹரிஷை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனா். இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...