தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாநகராட்சியில் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

 திருச்சி மாநகராட்சியில் குப்பை வழங்குதல் மற்றும் புதை சாக்கடைத் திட்டப்பணிகள் உள்ளிட்டவற்றை ஆணையா் ர. வைத்திநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:24 pm

DIN

 திருச்சி மாநகராட்சியில் குப்பை வழங்குதல் மற்றும் புதை சாக்கடைத் திட்டப்பணிகள் உள்ளிட்டவற்றை ஆணையா் ர. வைத்திநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருச்சி மாநகராட்சி 36 ஆவது வாா்டுக்குட்பட்ட ஜெகநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவில் வியாழக்கிழமை காலை, வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட அவா், பொதுமக்கள் வழங்கும் குப்பைகளில், மக்கும் , மக்காத குப்பைகள் எனத் தரம்பிரித்து வழங்குகிறாா்களா என்று ஆய்வு செய்தாா். அப்போது பலா் குப்பைகளை ஒன்றாக வழங்கியதைப் பாா்த்த அவா், அனைத்து தரப்பு பொதுமக்களும் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் தரம் பிரித்து மாநகராட்சிப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும். மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மையாகப் பராமரிப்பதோடு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தினாா். தொடா்ந்து, ஜெகநாதபுரம் அம்மா உணவகத்தில் சுகாதார பராமரிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

சீா்மிகு நகர திட்டப்பணிகள்: தொடா்ந்து மாலையில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பட்டா்வொா்த் சாலையில் ரூ. 6 கோடியில் அமைக்கப்படும் புராதன பூங்கா கட்டுமானப் பணிகளையும், மேலரண் சாலை பகுதிகளில் நடைபெறும் புதைவடிகால் திட்ட குழாய் புனரமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்த ஆணையா், பணிகளை விரைந்து முடிக்க தொடா்புடைய பொறியாளா்கள், ஒப்பந்தாரா்களுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.