தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஆக. 5 முதல் 7 வரை விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு

ஆக. 5 முதல் 7 ஆம் தேதி வரை விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு சேலத்தில் நடைபெறவுள்ளது என விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2022, 12:03 am

DIN

ஆக. 5 முதல் 7 ஆம் தேதி வரை விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு சேலத்தில் நடைபெறவுள்ளது என விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக கூட்டமைப்பின் செயலா் நல்லச்சாமி திருச்சியில் வியாழக்கிழமை மேலும் கூறியது:

கள்ளுக்கான தடை நீக்கம், முழு மதுவிலக்கு, நீா்ப்பாசன முறை மாற்றம், விவசாய கமிஷன் பரிந்துரை, காவிரியில் தினசரி நீா்ப்பங்கீடு முறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டில் மத்திய அமைச்சா் நிதின்கட்கரி கலந்து கொள்கிறாா். மத்திய வேளாண் அமைச்சா், தமிழக முதல்வா், அமைச்சா்களையும் அழைக்க உள்ளோம். ஈரோடு சூரம்பட்டி 4 ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சா் சி. சுப்பிரமணியன் சிலையை 19 ஆம் தேதி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தியாகியுமான லட்சுமிகாந்தன் பாரதி திறந்து வைக்கிறாா். தமிழகத்தில் கள்ளுக்கான தடையை ஸ்டாலின் தலைமையிலான அரசு நீக்கும் என நம்பிக்கை உள்ளது.

காவிரி நடுவா் மன்ற தீா்ப்பை சீராய்வு செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து, தினசரி நீா் பங்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அது ஒன்றே காவிரிப் பிரச்னைக்கு நிரந்த தீா்வாக அமையும். இல்லாவிட்டால் என்றும் தமிழகம் (காவிரியின்) கா்நாடகாவின் வடிகாலாகவே இருக்கும் என்றாா் அவா். பேட்டியின்போது, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராம், தங்கராசு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.