திருச்சி: திருச்சி அருகே சாலை விபத்தில் காலை இழந்த ராணுவ வீரருக்கு ரூ.1.67 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், வேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் பாண்டியன் (37). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 12 தேதி, அவரது மனைவியின் சொந்த ஊரான திருச்சி மாவட்டம் குண்டூர், ராகவேந்திரா நகருக்கு வந்துவிட்டு திரும்பிய போது, திருச்சி - புதுக்கோட்டை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவ்வழியே, அரசு பேருந்து மோதியதில், தனசேகரன் பாண்டியன் படுகாயமடைந்தார். இதில் அவரது அறுவை சிகிச்சை மூலம் வலது அகற்றப்பட்டது.
இதனால் அவர் ராணுவ பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக நவல்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விபத்தில் காலை இழந்ததற்கு நஷ்ட ஈடு கேட்டு வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த திருச்சி, மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி சோமசுந்தரம், பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் ரூ.1 கோடி 67 லட்சத்து என்பத்து நான்காயிரத்து இருபது வழங்கவேண்டுமென வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர் தரப்பில் தரப்பில் வழக்குரைஞர் முத்துமாரி ஆஜராகி வாதாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பகல் பொழுதே நள்ளிரவு போல தோன்றும்! முழு சூரிய கிரணம் எப்போது?

லாட்டரி மார்ட்டினின் ரூ. 457 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு!

முதல்வராக முதல் அரசு விழா! அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதல்வர் விஜய்!

காவல்துறை வாகன ஏலத்தில் மகனுக்காக கண்ணீர்விட்ட தாய்! நெகிழ்ச்சியான சம்பவம்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



