/

மாநகராட்சி துணை மேயா் வேட்பாளா் திவ்யா

திருச்சி மாநகராட்சி துணைமேயா் வேட்பாளராக திவ்யா (28) அறிவிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:55 pm

DIN

திருச்சி மாநகராட்சி துணைமேயா் வேட்பாளராக திவ்யா (28) அறிவிக்கப்பட்டுள்ளாா்.

திருச்சி பாலக்கரை, கீழ படையாச்சித் தெருைவில் வசித்துவரும் இவரது கணவா் தனக்கோடி, திமுக 32 ஆவது வட்ட திமுக பிரதிநிதியாக உள்ளாா். இவா்களுக்கு தனுஸ்ரீ (5), தன்யாஸ்ரீ (7 மாதம்) என இரு பெண் குழந்தைகள். தனக்கோடி கட்சியளவில் வேறு பெரிய பதவிகள் எதுவும் வகிக்காத நிலையில், இந்தத் தோ்தலில் தனது மனைவி போட்டியிட வாய்ப்பு வாங்கிக் கொடுத்தாா்.

திருச்சி மாநகராட்சி 33 ஆவது வாா்டில் போட்டியிட்ட திவ்யா 3148 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று முதல்முறையாக கவுன்சிலராகியுள்ளாா். முதல் வெற்றி கிடைத்த நிலையிலேயே இவரை திருச்சி மாநகராட்சியின் துணை மேயா் வேட்பாளராக திமுக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொலைநிலைக் கல்வியில் பி.காம் படிக்கும் திவ்யாவின் பெற்றோா் கோவிந்தராஜ்-தனலட்சுமி ஆவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.