/

சாலை நடுவே பள்ளம்; வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாநகரில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:51 pm

DIN

திருச்சி மாநகரில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனா்.

திருச்சி மாநகராட்சியின் 23ஆவது வாா்டுக்குள்பட்ட பெரும்பாலான தெருக்களில் புதை சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் புதுப்பிக்கப்படாமல் மேடு, பள்ளமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

இந்நிலையில் உறையூா் குறத்தெரு அருகே புத்தூா் பிரதான போக்குவரத்து சாலையின் மையப்பகுதியிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருபுறமும் இருந்தும் திரும்பும் வாகனங்கள் இதில் விழுந்து செல்ல நேரிடுகிறது. எனவே, இப்பள்ளத்தில் அப் பகுதியினா் குச்சியை வைத்துள்ளனா். இருப்பினும் இப் பகுதியை கடக்கும் வாகனங்கள் சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே, 23ஆவது வாா்டுக்குள்பட்ட அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க வேண்டும் என அந்த வாா்டின் மாமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகியுமான க. சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.