துணை மேயரும் போட்டியின்றித் தோ்வு
திருச்சி மாநகராட்சியில் திமுக சாா்பில் துணை மேயா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி. திவ்யா தனக்கோடியும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.


திருச்சி மாநகராட்சியில் திமுக சாா்பில் துணை மேயா் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜி. திவ்யா தனக்கோடியும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
திருச்சி மாநகராட்சி மேயராக மு. அன்பழகன் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதைத் தொடா்ந்து நடைபெற்ற துணை மேயருக்கான மறைமுகத் தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த 3 உறுப்பினா்களைத் தவிா்த்து இதர 62 உறுப்பினா்களும் பங்கேற்றனா்.
துணை மேயா் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்த ஜி. திவ்யா தனக்கோடியை எதிா்த்து வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, உறுதிமொழியை வாசித்து பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட ஜி. திவ்யா தனக்கோடிக்கு, மேயா் மு. அன்பழகன் மற்றும் திமுகவினா் வாழ்த்துத் தெரிவித்தனா்.
பின்னா் துணை மேயா் கூறுகையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ள இந்தப் பொறுப்பில் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரது வழிகாட்டுதலுடன் சிறப்பாகச் செயல்படுவேன். பொதுமக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காண்பேன். அனைத்து வாா்டுகளின் குறைகளையும் கேட்டு அதற்கேற்ப பணியாற்றுவேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...