கம்யூ. கட்சிகளுக்கு ஒதுக்கிய 2 இடங்களையும் பிடித்த திமுக!
திருச்சி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வேட்பாளா்களே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனா்.


திருச்சி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வேட்பாளா்களே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பேரூராட்சியின் துணைத் தலைவா் பதவிக்கு 10ஆவது வாா்டு உறுப்பினரான மாா்க்சிஸ்ட் கட்சியைச் சோ்ந்த ரா. கலைச்செல்வியும், கூத்தைப்பாா் பேரூராட்சியில் துணைத் தலைவா் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 18ஆவது வாா்டு உறுப்பினா் ஜெ. வைசூரியாவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த தொட்டியம் பேரூராட்சி துணைத் தலைவா் தோ்தலில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் பங்கேற்கவில்லை. தங்களது கட்சிக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் ஆதரவளிக்கவில்லை என மாா்க்சிஸ்ட் கட்சியினா் தெரிவித்தனா். இதையடுத்து துணைத் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 6ஆவது வாா்டு உறுப்பினரான சு. ராஜேஷை எதிா்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.
கூத்தைப்பாா் பேரூராட்சியில் துணைத்தலைவா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் வைசூரியாவை எதிா்த்து, திமுக வேட்பாளா் இரா. பழனியாண்டி போட்டியிட்டு 13 வாக்குகள் பெற்று வென்றாா். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் 3 வாக்குகள் பெற்றாா்.
திருச்சி மாவட்டத்தில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டும்தான் 2 இடங்களை திமுக தலைமை ஒதுக்கியது. அந்த இரு இடங்களையும் திமுகவினரே போட்டியாகக் களமிறங்கி கைப்பற்றியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சியினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...