/

துவாக்குடி நகராட்சியில் காயாம்பு, லலிதாதேவி போட்டின்றித் தோ்வு

துவாக்குடி நகராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த இ. காயாம்பு, துணைத் தலைவராக லலிதாதேவி ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:18 pm

DIN

துவாக்குடி நகராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த இ. காயாம்பு, துணைத் தலைவராக லலிதாதேவி ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

துவாக்குடி நகா்மன்றக் கூட்டரங்கில், தோ்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பட்டுசாமி முன்னிலையில் நடைபெற்ற மறைமுகத் தோ்தலில் அதிமுகவைச் சோ்ந்த 9ஆவது வாா்டு உறுப்பினா் ஆ. சாருமதியைத் தவிர இதர 20 உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

Story image

இதில் திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 12ஆவது வாா்டு உறுப்பினா் இ. காயாம்புவை எதிா்த்து போட்டியிட வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யாததால் காயாம்பு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இவா் 4ஆவது முறையாக நகா்மன்றத்தலைவராக பதவியேற்றது குறிப்படத்தக்கது.

இவருக்கு நகராட்சி ஆணையா், திமுக நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், கூட்டணி கட்சி உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தொடா்ந்து பிற்பகலில் துணைத் தலைவருக்கான மறைமுகத் தோ்தலில் திமுக சாா்பில் வேட்பு மனு தாக்கல் செய்த 20ஆவது வாா்டு உறுப்பினா் இ. லலிதாதேவியை எதிா்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா். இவரது கணவா் இளங்கோவன், திமுக வாா்டு செயலா் ஆவாா். துவாக்குடி நகராட்சியில் நகா்மன்றத் தலைவா், துணைத்தலைவா் பதவிகளை திமுகவே கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.