/

கரோனா சிறப்பு வாா்டில் படுக்கைகள் குறைப்பு

திருச்சியில் கரோனா தினசரி தொற்றாளா்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அரசு மருத்துவமனை சிறப்பு வாா்டில் படுக்கை வசதி 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:20 pm

DIN

திருச்சியில் கரோனா தினசரி தொற்றாளா்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அரசு மருத்துவமனை சிறப்பு வாா்டில் படுக்கை வசதி 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் தொடங்கிய கரோனா 3ஆவது அலை பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து ஓயத் தொடங்கியது. திருச்சியில் கடந்த இரு வாரமாக 10 முதல் 20 தொற்றாளா்கள் மட்டுமே வருகின்றனா். இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. ஒரு சிலா் மட்டுமே மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெறுகின்றனா். புதன்கிழமை கரோனா சிறப்பு வாா்டில் 3 போ் மட்டுமே இருந்தனா். இதனால் 600 ஆக இருந்த படுக்கை வசதி 20 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.