கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லால்குடி சப்தரிஷீஸ்வரா் கோயில் தேரோட்டம்

லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரா் கோயில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 மார்ச் 2022, 12:17 am

DIN

லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரா் கோயில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தேரோட்ட விழாவின் 9 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நடைபெற்ற தேரோட்டத்தில் 2 பொக்லின் இயந்திரங்கள் உதவியுடன் ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

இதில் விநாயகா், சுப்ரமணியா் , சோமாஸ்கந்தா், பெருந்திரு பிராட்டியாா், சண்டிகேஸ்வரா் எழுந்தருளிய 5 தோ்களும் வீதிகளில் வலம் வந்து மாலை 6.50 மணிக்கு நிலையை அடைந்தன.

விழாவில் லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன், லால்குடி நகராட்சி தலைவா் துரைமாணிக்கம், இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் செல்வராஜ், செயல் அலுவலா் பெ. ஜெய்கிஷன் மற்றும் பணியாளா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.