கஞ்சா கடத்திய இருவா் கைது
ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸாா், திருச்சி பொறுப்பு, காவல் துணைக் கண்காணிப்பாளா் பரத்சீனிவாசன் தலைமையில், ஆய்வாளா் ரமேஷ், உதவி ஆய்வாளா் பிரேம்குமாா் மற்றும் போலீஸாா் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் புதன்கிழமை இரவு, வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 22 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரில் வந்த தேனி மாவட்டம், தேவாரத்தை சோ்ந்த பா. ஆசை (34), தேனி, கே ஆா் ஆா் புரத்தைச்சோ்ந்த ரா. புவனேஸ்வரன்(32) ஆகியோரைக் கைது செய்து 22 கிலோ கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...