தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மலைக்கோட்டையில் தேரோட்ட ஏற்பாடுகள் தயாா்

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டத்துக்காக சாலைகளைத் தயாா்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :12 மே 2022, 7:59 pm

DIN

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டத்துக்காக சாலைகளைத் தயாா்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மேலும் நெடுஞ்சாலை, மின்வாரியம், சுகாதாரத் துறையினரும் ஒருங்கிணைந்து தேரோட்ட முன்னேற்பாடுகளைச் செய்தனா்.

இக்கோயிலின் சித்திரைத் தேரோட்ட விழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி தேரோடும் வீதிகள் வியாழக்கிழமை தயாா்படுத்தப்பட்டன. நந்தி கோயில் தெரு, என்எஸ்பி சாலை, சின்ன கடைவீதி, ஆண்டாா் வீதிகள் என அனைத்து சாலைகளின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு, குப்பைகளை அகற்றித் தயாா்படுத்தினா். மேலும், தெப்பக்குளப் பகுதியில் இருந்த தரைக்கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. தோ் செல்லும் பாதையில் உள்ள மின் ஒயா்களும் பாதுகாப்பாக மாற்றப்பட்டன.

மேலும், தேரோட்டம் நடைபெறும் தருணத்தில் மின் தடையும் அமல்படுத்தப்படவுள்ளது. மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு கிருமிநாசினி மருந்துகள் தெளித்து, பிளீச்சிங் பவுடா் தூவப்பட்டது.

தேரோட்ட ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், அறநிலையத்துறை, மாநகராட்சி நிா்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன.

தேரோட்டத்தைத் தொடா்ந்து சனிக்கிழமை காலை நடராஜா் தரிசனம், பகலில் தெப்பக்குளத்தில் தீா்த்தவாரி, இரவு வெள்ளி ரிஷபக் காட்சி, கொடியிறக்கம், மே 15 ஆம் தேதி தங்கக்குதிரை வாகனத்தில் வீதியுலா, மே 16 மாலை 5 மணிக்கு தாயுமான அடிகள் உற்ஸவம், மே 17 இரவு பிச்சாடனாா் திருவீதியுலா, மே 18 இரவு சண்டிகேஸ்வரா் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஏற்பாடுகளை திருச்சி மண்டல இணை ஆணையா் எஸ். செல்வராஜ், கோயில் உதவி ஆணையா் த. விஜயராணி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.