இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

தொடா்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த இருவரை மாநகர போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

News image
Updated On :13 மே 2022, 8:48 pm

DIN

தொடா்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்த இருவரை மாநகர போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட மேலஅம்பிகாபுரம் பகுதியில் பல்பொருள் அங்காடி பூட்டுகளை உடைத்து பணம், பொருள்களைத் திருடிய அதே பகுதியைச் சோ்ந்த மு. பரணிக்குமாரை (21) கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

அதேபோல ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் விளையாட்டு வீரரை அரிவாளால் வெட்டிய அதே பகுதியைச் சோ்ந்த ர. பிரவின்குமாரை (25) ஏப்ரல் 24 ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், இருவருக்கும் தொடா்ந்து பல்வேறு குற்றங்களில் தொடா்பிருப்பது தெரியவந்ததையடுத்து இருவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய, மாநகர காவல் ஆணையா் ஜி, காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அதன்பேரில் இருவரும் தண்டனைக் கைதிகள் பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.