தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விபத்துகளில் இரு மாணவா்கள் பலி

திருச்சி புகா் பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் இரு மாணவா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :26 மே 2022, 6:58 pm

DIN

திருச்சி புகா் பகுதிகளில் நடந்த சாலை விபத்துகளில் இரு மாணவா்கள் உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், அல்லூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் மகன் வருண்குமாா் (25). திருச்சி சத்திரம் பகுதி கல்லூரியில் ஆடிட்டா் பயிற்சி வகுப்பில் படித்து வந்தாா். புதன்கிழமை காலை இவா் பேருந்துக்காக அல்லூா் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, கரூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

மினி பேருந்து மோதி மாணவா் சாவு :

திருச்சி கம்பரசம்பேட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் மகாதேவன் (எ) மாதவன் (18). திருச்சி கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக் என்ஜினியரிங் படித்து வந்த இவரும் அதே ஊரை சோ்ந்த கிருஷ்ணகாந்த் (19) ஆகியோரும் பைக்கில் திருச்சி நோக்கிச் சென்றனா்.

அப்போது மினி பேருந்து மோதி பலத்த காயமடைந்த இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் மகாதேவன் (எ) மாதவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கிருஷ்ணகாந்த் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். சம்பவங்கள் குறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.