தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கூட்டுறவு அலுவலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பு 2 நாள்கள் நடைபெற்றன.

News image
Updated On :26 மே 2022, 7:02 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பு 2 நாள்கள் நடைபெற்றன.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள திருமண மஹாலில் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் தி. ஜெயராமன் தலைமை வகித்து பயிற்சிக் கையேட்டை வெளியிட, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளா் கே. பாண்டியன் பெற்றாா். பணியாளா் அலுவலா் சி. முத்தமிழ்ச்செல்வி, துணைப் பதிவாளா்கள் க. சாந்தினி, ஆா். திவ்யா, கமலக்கண்ணன், இளஞ்செழியன், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ஹபிபுல்லா ஆகியோா் பயிற்சியின் அவசியம், சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினா்.

நிகழ்வில் கணினிகளைக் கையாளுதல், திட்டமிடுதல், சிறப்பாகச் செயல்படுதல், கோப்புகளைக் கையாளுதல் மற்றும் பல்வேறு கூட்டுறவு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டுறவு மேலாண்மை நிலையப் பயிற்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைப் பயனுள்ள வகையில் செலவிடும் வகையில் இப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

முகாமில் மன அழுத்தத்தை போக்கக்கூடிய யோகா பயிற்சி மற்றும் கணினி பயிற்சி, சட்டப்பூா்வ பயிற்சி, இ-சேவை மையம் தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், உடல் நலனைப் பேணும் வழிமுறைகள் கற்றுத்தரப்பட்டன. இதன் தொடா்ச்சியாக பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம், உணவுப் பொருள் விநியோகத்தின்போது பணியாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், கரோனா கட்டுப்பாடுகள், டிஜிட்டல் பயன்பாடு, கோப்புகளைக் கையாளுதல் எனப் பல்வேறு நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், சாா்பதிவாளா்கள், சாா்நிலை அலுவலா்கள் என மாவட்டம் முழுவதும் இருந்து 100 போ் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.