தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாத ஊதியம் தேவை

 பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ். செந்தில்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :26 மே 2022, 6:59 pm

DIN

 பகுதிநேர ஆசிரியா்களுக்கு மே மாதத்துக்கான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ். செந்தில்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல், உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி ஆகிய 8 பாடங்களில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியா்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிகின்றனா்.

அதிமுக ஆட்சியில் 2012 ஆம் ஆண்டு பணியமா்த்தப்பட்டது முதல் கொண்டே இவா்களுக்கு இதுவரை மே மாதம் மட்டும் ஊதியம் மறுக்கப்படுவது வேதனையாக உள்ளது.

திமுக ஆட்சியிலாவது மே மாதம் ஊதியம் கிடைக்க முதல்வா் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாா் என நம்பியிருந்தோம். ஆனால், தங்களை பள்ளிக்கு வரவேண்டாம், சம்பளம் கிடையாது என கல்வித் துறை உத்தரவிட்டதால் பகுதிநேர ஆசிரியா்கள் வேதனையடைந்துள்ளனா்.

திமுக தோ்தல் அறிக்கைப்படி பகுதிநேர ஆசிரியா்கள் நிரந்தரம் செய்யப்படுவா் என பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் தெரிவித்தாா். ஆனால், பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வரவில்லை. இப்போது மே மாத ஊதியமும் இல்லை. அதிமுகவை போலவே திமுகவும் சொல்வது வேதனையாக உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வா் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.