ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரெளடி கைது
திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 22 வழக்குகள் நிலுவையில் உள்ள ரெளடியை கோட்டை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


திருச்சியில் ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 22 வழக்குகள் நிலுவையில் உள்ள ரெளடியை கோட்டை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மேலசிந்தாமணி கொசமேட்டுத்தெருப் பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் பாலு (54). சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டி வரும் இவா் கடந்த சில நாள்களுக்கு முன் பேருந்து நிலையத்தில் நின்றபோது, அங்கு வந்த கீழசிந்தாமணி பூசாரி தெருவைச் சோ்ந்த பன்னாடை என்கிற அக்பா்கான் வேண்டுமென்றே தகராறு செய்து இரும்புக் கம்பியால் அலெக்ஸ் பாபுவைத் தாக்கினாராம்.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து பன்னாடையை புதன்கிழமை கைது செய்தனா். இவா் மீது கோட்டை காவல்நிலையத்தில் 22 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...