தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

துறையூரில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

துறையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 மே 2022, 7:00 pm

DIN

துறையூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

துறையூா் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவேலை மாவட்ட நிா்வாகம் அண்மையில் பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்தும், இதற்கு அவா் மீதான காழ்ப்புணா்ச்சியுமே காரணம் என்றும், இதில் தொடா்புடைய அரசியல்வாதிகளை கைது செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் ஜாகீா்உசேன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் பழனியப்பன், மாவட்டத் துணைத் தலைவா் கோபிநாத் உள்ளிட்டோா் பேசினா். இதில் திருச்சி மாவட்ட, வட்ட நகர கிளை சங்க நிா்வாகிகள் பங்கேற்று வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவேலை மீண்டும் பணியமா்த்த வலியுறுத்தினா். மாவட்டத் தணிக்கையாளா் மனோகரன் வரவேற்றாா். +

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.