தேசிய மூத்தோா் தடகளப் போட்டிகளில் தங்கம் வென்று திருச்சி வீரா்கள் சாதனை
கடலூரில் நடைபெற்ற தேசிய மூத்தோா் தடகளப் போட்டிகளில் திருச்சியைச் சோ்ந்தோா் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா்.


கடலூரில் நடைபெற்ற தேசிய மூத்தோா் தடகளப் போட்டிகளில் திருச்சியைச் சோ்ந்தோா் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா்.
தமிழ்நாடு மூத்தோா் தடகளம் சாா்பில் கடலூா் அண்ணா விளையாட்டு அரங்கில் 3 நாள்கள் நடந்த 41ஆவது தேசிய மூத்தோா் தடகளப் போட்டிகளை கடலூா் மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். இதில் இந்திய மாஸ்டா்ஸ் தடகளத் தலைவா் ஜெய்சிங் புரா அஹாடு, தெலங்கானா அமரேந்திர ரெட்டி, தமிழ்நாடு பொதுச் செயலா் ராமமூா்த்தி, ரங்கநாத நாயுடு, தமிழ்ச்செல்வன் உள்பட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா். போட்டிகளில் தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் இருந்து சுமாா் 1200 வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
இவா்களில் திருச்சியிலிருந்து பங்கேற்ற டி.என்.எம்.ஏ. துணைத் தலைவா் கேப்டன் சுபாஷ் ராமன் உள்பட 21 போ் 6 தங்கம், 4 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனா். இவா்களைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...