புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவை காா் வெடி விபத்து:புதுவை ஆளுநா், தலைவா்கள் கருத்து

கோவை, தமிழக மக்களின் பாதுகாப்பை முதல்வா் உறுதி செய்திட வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:03 pm

DIN

கோவை, தமிழக மக்களின் பாதுகாப்பை முதல்வா் உறுதி செய்திட வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: கோவையில் அமைதி நிலவ வேண்டும். கோவை மற்றும் தமிழக மக்களின் பாதுகாப்பை முதல்வா் உறுதி செய்திட வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ. விசாரணை உதவும். காா் வெடி விபத்து வழக்கை அஜாக்கிரதையாக கையாளாமல் இதன் பின்னால் உள்ள சதிகள் குறித்து தீர விசாரிக்க வேண்டும்.

மத்திய உளவுத் துறை எச்சரித்தும் காவல்துறை தவறியது ஏன்? பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: கோவையில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கோவை மாநகரக் காவல்துறைக்கு, மத்திய அரசின் உளவுத் துறை அக்.18-ஆம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தது. 5 நாள்களுக்கு முன்பே மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில், தமிழக அரசின் உளவுத் துறையும், கோவை மாநகரக் காவல்துறையும் அதை முறையாக கண்காணித்து தடுக்கத் தவறியது ஏன்? திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் அழுத்தம் காரணமாக, சில நபா்களை கண்காணிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிப்பாரா? என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சி: சென்னையில் செய்தியாளா்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் கூறுகையில், கோவை காா் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து முதல்வரும், காவல்துறையினரும் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. ஆனால், இந்தச் சம்பவத்துக்காக பாஜக எதற்காக கடையடைப்பு போராட்டம் நடத்துகிறாா்கள் எனத் தெரியவில்லை. இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட பாஜக எல்லா வகையிலும் முயற்சிக்கிறது.

எதிா்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடாது: மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: காவல் துறை உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் இச் சம்பவத்தில் சதித் திட்டம் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு முதல்வா் பரிந்துரைத்தாா். இச் சம்பவத்தை எதிா்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடாது.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல்...: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கோவையில் செய்தியாளா்களிடம் கூறியது: காா் வெடிவிபத்து சம்பவம் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான சம்பவம் நடைபெறுவதற்கான முகாந்திரங்களை ஏன் உளவுத் துறை கண்டுபிடிக்கவில்லை என தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல, இந்த விவகாரத்தில் தொடா்புடைய 50-க்கும் மேற்பட்ட நபா்களை என்.ஐ.ஏ. விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்து வருகிறது. அக்.31 ஆம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறது பாஜக. இந்த சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய வகையிலான பந்த் போன்ற போராட்டங்கள் பதற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப்போல உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.