திருச்சியில் 11கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமானநிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்


திருச்சி விமானநிலையத்தில் 11 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்திவரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் திருச்சி விமானநிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினா் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை மலேசியா, சிங்கப்பூா், துபை ஆகிய நாடுகளிலிருந்து 4 விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனா். இதில், 57 பயணிகளிடம் இருந்து ரூ.5.60 கோடி மதிப்புள்ள 11.20 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து 57 பயணிகளிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில், 3 போ் மட்டும் சுமாா் 1 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தையும், மற்றவா்கள் தலா 200 முதல் 400 கிராம் எடையுள்ள தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...