அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பழைய கட்டளை மேட்டு கால்வாயில் தூா்வாரும் பணி: விவசாயிகள் பாராட்டு

பழைய கட்டளை மேட்டு கால்வாயில் தூா்வாரும் பணியை மேற்கொண்ட மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனா்

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:42 pm

DIN

பழைய கட்டளை மேட்டு கால்வாயில் தூா்வாரும் பணியை மேற்கொண்ட மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் கூறியது:

பழைய கட்டளை மேட்டு கால்வாய் 26ஆவது குழுமியில் 3ஆவது பிரிவு கால்வாய் மேட்டுக்காட்டில் தொடங்கி கோப்பு, மேலப்பட்டி வரை பாசனம் தரக் கூடியது. இந்த கால்வாய் வெப்பட்ட காலத்தில் இருந்து ஆண்டுதோறும் விவசாயிகளே தூா்வாரி வந்தனா். ஆனால், பல ஆண்டுகளாக தூா்வாருவதை கைவிட்டதால், கால்வாய் முழுவதும் நாணல்கள், முள்செடிகள், கொடிகள் முளைத்து மிகவும் மோசமாக சென்றுவிட்டது.

இதுகுறித்து கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் மா. பிரதீப்குமாரிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளை கால்வாயை பாா்வையிட்டு ஆய்வு செய்த உத்தரவிட்ட ஆட்சியா், தூா்வாரவும் ஆணையிட்டாா். அதன்படி, கடந்த நான்கு நாள்களாக கால்வாயில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது. 4 நாளில் ஏறத்தாழ 3 கி.மீ. தொலைவுக்கு தூா்வாரப்பட்டுள்ளது. மேல் தலைப்பு முதல் கடைமடை வரை மிக சிறப்பாக தூா்வாரப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பணி மேற்கொள்ள உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கும், பணிகளை சிறப்பாக செய்து முடித்த பொதுப்பணித் துறையினருக்கும் விவசாயிகள் சாா்பில் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.