தீபாவளி பட்டாசு கடை:இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்
திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்பும் நபா்கள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.


திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை வைக்க விரும்பும் நபா்கள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்.24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்யவும், இருப்பு வைத்துக்கொள்ளவும் உரிமம் கோரும் விண்ணப்பங்கள் செப்.1ஆம் தேதி முதல் பெறப்படுகிறது. இணையம் மூலம் விண்ணப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008ஆம் ஆண்டுக்குள்பட்டு, உரிய ஆவணங்களுடன் செப். 30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த வாய்ப்பை பட்டாசு சில்லறை வணிகம் செய்வோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...