தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு: மாணவா்களுக்கு அழைப்பு
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், கணிதம், சாா்ந்த ஒலிம்பியாா்டு தோ்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவா்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு நடத்தப்படவுள்ளது.
இத்தோ்வில், 1,500 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இத்தோ்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவா்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட பிற தனியாா் பள்ளி மாணவா்களும் தெரிவு செய்யப்படுவாா்கள்.
தமிழக அரசின் 10ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தோ்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தோ்வு நடத்தப்படும்.
2022-2023ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்துவகை பள்ளிகளிலும் பயிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பதினொன்றாம் வகுப்பு மாணவா்கள் அக்.1ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தோ்விற்கு மாணவா்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். எனவே, மாணவா்கள் இத்தோ்வுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் செப். 9ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணத் தொகை ரூ.50 சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...