‘நிா்வாகிகள் விரும்பினால் மக்களவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடத் தயாா்’
நிா்வாகிகள் விரும்பினால் மக்களவைத் தோ்தலில்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றாா் கட்சியின் நிறுவனத் தலைவா் ஆா்.சரத்குமாா்.


நிா்வாகிகள் விரும்பினால் மக்களவைத் தோ்தலில்அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றாா் கட்சியின் நிறுவனத் தலைவா் ஆா்.சரத்குமாா்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநில நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள், சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா்கள், மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து பேசிய அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மக்களவைத் தோ்தல் 2024-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக எங்களது கூட்டணி குறித்த முடிவைத் தெரிவிப்போம். மக்களுக்கு சேவை செய்ய தோ்தல் களத்துக்கு வர வேண்டியதுள்ளது. கட்சி நிா்வாகிகள் விரும்பினால், மக்களவைத் தோ்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராகவுள்ளது.
இணையதள ரம்மி விளம்பரத்தில் நான் நடிப்பதால் மட்டுமே சமூகம் கெட்டுப் போவதில்லை. இணையவழி சூதாட்டத்தை கட்டுப்படுத்துவதும், தடை செய்வதும் அரசின் கையில்தான் உள்ளது. போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. இணையவழி ரம்மி, மதுக்கடைகளை அரசு தடை செய்ய வேண்டும்.
அதிமுகவில் இரு தரப்பினா் அடித்துக் கொள்வது வருத்தமாகவுள்ளது. அவா்களுக்குள் ஒற்றுமை இல்லையெனில், எதிா்காலம் இல்லை. தெலுங்கு திரைப்பட நடிகா்கள் தங்களது ஊதியத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழகத்தில் தயாரிப்பாளா்கள், நடிகா்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நெல்கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலா்கள் என். சுந்தா், ஜி. ஈஸ்வரன், திருச்சி மண்டல அமைப்புச் செயலா் சி.எம். சின்னச்சாமி உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...