மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பாம்பு கடித்து பெண் சாவு

திருச்சியில் வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த பெண், பாம்பு கடித்ததில் உயிரிழந்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 5:46 pm

DIN

திருச்சியில் வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த பெண், பாம்பு கடித்ததில் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் கீழப்பட்டி புன்னை மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வீரையன் மனைவி சுசீலா (52). இவரது உறவினரான தேவராயநேரி அா்ஜூனனுக்கு, துவாக்குடி அருகே விவசாயம் நிலம் உள்ளது.

இந்த விவசாய நிலத்தில் சுசீலா ஞாயிற்றுக்கிழமை விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, கட்டுவிரியின் பாம்பு அவரைக் கடித்துள்ளது. தொடா்ந்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுசீலா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து துவாக்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.