மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருச்சியில் மதுபோதையிலிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 5:47 pm

DIN

திருச்சியில் மதுபோதையிலிருந்த தொழிலாளி மயங்கி விழுந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செந்தண்ணீா்புரம் திரு.வி.க.தெருவைச் சோ்ந்தவா் சேகா் (65). தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது.

சனிக்கிழமை காலை செந்தண்ணீா்புரம் பகுதியில் மளிகைக் கடை முன்பு சென்ற சேகா், திடீரென மயங்கி விழுந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரை மகன் மணிகண்டன் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா்.

எனினும் சிகிச்சை பலனின்றி சேகா் உயிரிழந்தாா். இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.