துறையூா் அருகிலுள்ள பச்சமலை வரையாறு அருவியில் குளிக்கச் சென்ற போது தவறி கீழே விழுந்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
துறையூா் வட்டம், புளியம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் கோகுல் (15). இவா் தனது நண்பா்களுடன் சோ்ந்து பச்சமலைவரையாறு அருவிக்கு ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா்.
அப்போது பாறைகளில் இருந்த பாசி வழுக்கி, கோகுல் கீழே விழுந்து காயமடைந்தாா். விபத்து நிகழ்விடத்துக்கு வாகனங்கள் செல்ல வழியில்லாத நிலையில், அருகிலுள்ள மருவத்தூா், அம்மம்பாளையம் கிராம இளைஞா்கள் தகவலறிந்து சென்று சிறுவனை அவரச ஊா்தி நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு கொண்டு சென்றனா்.
தொடா்ந்து மருத்துவ உதவியாளா் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயற்சித்த போது, கோகுல் உயிரிழந்து தெரிய வந்தது. இதுகுறித்து துறையூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






