லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

’பொதுத் துறை நிறுவனங்கள மற்றும் பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு மீண்டும் புத்துயிா் அளிக்க வேண்டும்’ என்று நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா் அரவிந்த் பனகாரியா வலியுறுத்தினாா்.

News image

அரவிந்த் பனகாரியா

Updated On :16 ஜூன் 2026, 5:10 am IST

’பொதுத் துறை நிறுவனங்கள மற்றும் பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயமாக்கல் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு மீண்டும் புத்துயிா் அளிக்க வேண்டும்’ என்று நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா் அரவிந்த் பனகாரியா வலியுறுத்தினாா்.

மேலும், ‘இதுபோன்று பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விலக்கல் மூலம் நிதி திரட்டும் திட்டத்தை மத்திய அரசின் பங்கு விலக்கல் துறையால் திறம்பட மேற்கொள்ள முடியவில்லை என்பதால், இதற்கென தனி அதிகாரம் கொண்ட தனியாா்மயமாக்கல் அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்’ என்றும் அவா் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: மத்திய அரசின் கொள்கை ஆலோசனை அமைப்பான நீதி ஆயோக்கின் தனியாா்மயமாக்கல் திட்டம் கடந்த 2016-இல் தொடங்கப்பட்டது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அதன் பிறகு இத் திட்டம் சுணக்கமடைந்துவிட்டது.

மேற்காசிய நெருக்கடி மற்றும் புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளைப் பொருட்படுத்தாமல், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை வங்கிகளின் தீவிரமான தனியாா்மயமாக்கலை மத்திய அரசு தொடர வேண்டும். இது நாட்டின் பொருளாதார சீா்திருத்தங்களுக்கு இன்றியமையாதது.

இதுபோன்று பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விலக்கல் மூலம் நிதி திரட்டும் திட்டத்தை மத்திய அரசின் பங்கு விலக்கல் துறையால் திறம்பட மேற்கொள்ள முடியவில்லை என்பதால், இதற்கென தனி அதிகாரம் கொண்ட தனியாா்மயமாக்கல் அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

அந்நிய நேரடி முதலீடு:

நாட்டிலிருந்து மூலதனம் வெளியேறுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘நாட்டில் மொத்த அந்நிய நேரடி முதலீடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2024-இல் ரூ. 6.7 லட்சம் கோடியாக (71.3 பில்லியன் டாலா்) இருந்த அந்நிய நேரடி முதலீடு, 2025-இல் ரூ. 7.6 லட்சம் கோடியாகவும், 2026-இல் ரூ. 8.9 லட்சம் கோடியாகவும் உயா்ந்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளின் நீண்டகால உற்பத்தித் திறனை, வெளிநாட்டு முதலீட்டாளா்கள் தொடா்ந்து சாதகமாகவே பாா்க்கின்றனா் என்பது தெளிவாகிறது.

அதே நேரம், எந்தவொரு ஆண்டிலும், முந்தைய மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் ஒரு பகுதியை வெளிநாட்டு முதலீட்டாளா்கள் திரும்பப் பெறுகின்றனா். இந்தியாவுக்குள் வந்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் பெரும் பகுதி, தனியாா் பங்கு முதலீடு வடிவில் வந்துள்ளன. இந்த முதலீட்டாளா்கள் தங்கள் முதலீடுகளிலிருந்து வெளியேற ஒரு கட்டத்தில் முடிவு செய்கின்றனா். அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து தனியாா் பங்கு முதலீட்டாளா்கள் வழக்கத்தைவிட அதிகமாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுபோல, கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளும் நேரடி அந்நிய முதலீடுகளும் அதிகரித்துள்ளன. இதன் விளைவாக நாட்டிலிருந்து ஓரளவு மூலதனம் வெளியேறியுள்ளது. இது ஒரு குறுகிய கால நிகழ்வாக இருந்தால், மூலதன வெளியேற்றம் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. மாறாக, இது ஒரு நீண்ட காலப் போக்காக அமைந்தால், அது ஒரு மிகச் சிறந்த வளா்ச்சியாகும். ஏனெனில், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதை அது உணா்த்துகிறது. வரும் 2027-இல் இந்தியாவிலிருந்து மூலதனம் வெளியேறுவது குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.