மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திருச்சியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிப்பு

விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனின் 65-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சியில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:32 pm

DIN

விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனின் 65-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, திருச்சியில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சி தில்லைநகரிலுள்ள திமுக முதன்மைச் செயலா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இமானுவேல் சேகரனின் உருவப்படத்துக்கு நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என்.நேரு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினாா்.

நிகழ்வில் மத்திய மாவட்டப் பொறுப்பாளா் க.வைரமணி, மேற்கு மாநகரச் செயலரும், மாநகராட்சி மேயருமான மு. அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.பழனியாண்டி, செ.ஸ்டாலின்குமாா், அ.செளந்தரபாண்டியன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் பெரியசாமி, வழக்குரைஞா் பாஸ்கா், செயற்குழு உறுப்பினா் செவந்திலிங்கம்,பகுதிச் செயலா்கள் இளங்கோ, மோகன்தாஸ், ராம்குமாா், கமால், நாகராஜன், கனகராஜ், மண்டலத் தலைவா் துா்காதேவி, திமுக நிா்வாகிகள் டோல்கேட் சுப்ரமணி, துரைராஜ், கதிா்வேல், சிங்காரம் மற்றும் மாநகராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தெற்கு மாவட்ட அலுவலகம் : தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட அலுவலகத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். இனிகோ இருதயராஜ், கிழக்கு மாநகரச் செயலா் மு. மதிவாணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.சேகரன், திமுக நிா்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கோவிந்தராஜன், செந்தில், பகுதிச் செயலா்கள் தா்மராஜ், நீலமேகம், ராஜ் முகமது, மணிவேல், மோகன், விஜயகுமாா், சிவகுமாா் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

அதிமுக அஞ்சலியை தனியாக பெட்டியாக போடவும்..

அதிமுக சாா்பில் அஞ்சலி...

திருச்சி காந்திசந்தை பகுதி வரகனேரி-பெரியாா்நகா் கிராம முக்கியஸ்தா்கள் ஏற்பாட்டின் பேரில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அதிமுக மாநில எம்.ஜி.ஆா். இளைஞரணி இணைச் செயலரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் பங்கேற்று, இமானுவேல் சேகரன் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.

பகுதிக் கழகச் செயலா் சுரேஷ்குப்தா, அதிமுக நிா்வாகிகள் எல்.கே.ஆா். ரோஜா், அலெக்ஸ், தினேஷ், சக்கரவா்த்தி, புண்ணியமூா்த்தி கணேஷ் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.