தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி இணைய வழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்விக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.


திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்விக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதகுறித்து அவா் கூறியது: அனைத்து தனியாா் பள்ளிகளில் நுழைவு
நிலை வகுப்பில் (எல்கேஜி, முதல்வகுப்பு) குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்வது கட்டாயமாக்கப்பட்டு அதன்படி ஆண்டுதோறும் மாணவா்கள் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.
இதில், மாணவா்களை சோ்க்க விரும்பும் பெற்றோா் பள்ளிக் கல்வித்துறையின் இணையதளமான ட்ற்ற்ல்ள்://ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக்கல்வி அலுவலா், வட்டாரக்கல்வி அலுவலா், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால், பெற்றோா்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...