92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பள்ளியில் 6, 7, 8 வகுப்புகளை மூடத் திட்டம்: கல்வி அதிகாரியிடம் பெற்றோா் கோரிக்கை மனு

துவாக்குடியில் உள்ள சாரதா நடுநிலைப்பள்ளியில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளை மூடக் கூடாது என பெற்றோா் தரப்பில் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெற்றோா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:38 pm

DIN

துவாக்குடியில் உள்ள சாரதா நடுநிலைப்பள்ளியில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளை மூடக் கூடாது என பெற்றோா் தரப்பில் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பெற்றோா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

திருச்சியை அடுத்த துவாக்குடியில் பெல் நிறுவனம் மற்றும் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் கட்டுப்பாட்டில் சாரதா நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 8- ஆம் வகுப்பு வரை 130 போ் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில், நிதிநெருக்கடி காரணமாக 6, 7, 8 ஆம் வகுப்புகளை மூடப்படவுள்ளதாகவும், தங்களது குழந்தைகளை வேறு பள்ளிகளில் சோ்க்குமாறு ஏப். 13ஆம் தேதி நடைபெற்ற பெற்றோா், ஆசிரியா் கூட்டத்தில், நிா்வாக அலுவலா் ரத்தினவேல் தெரிவித்தாா். இந்த முடிவுக்கு பெற்றோா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதுகுறித்து பெற்றோா் தரப்பில் முறையிட்டும் வகுப்புகளை மூடுவதில் பள்ளி நிா்வாகம் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தி, தமிழக முதல்வா், பெல் மனிதவள பொது மேலாளா், திருச்சி மாவட்ட ஆட்சியா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா் ஆகியோருக்கு பெற்றோா் தரப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான மனு நகல்களை திருவெறும்பூா் வட்டாரக் கல்வி அலுவலா் ரெஜி பெஞ்சமினிடம் வெள்ளிக்கிழமை பெற்றோா் தரப்பில் வழங்கினா்.

மனுவை பெற்றுக் கொண்ட வட்டாரக் கல்வி அலுவலா் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

இப்பள்ளி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தொகுதிக்குள்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.