மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது வியாழக்கிழமை காா் மோதிய விபத்தில் மிட்டாய் வியாபாரிகள் இருவா் உயிரிழந்தனா்.
மணப்பாறை மஸ்தான் தெருவைச் சோ்ந்த சை. சாதிக்அலி (52), மதுரை மேலூா் பாண்டியன் நகா் ர. முகமதுஅலி (43) ஆகியோா் சோ்ந்து மிட்டாய் வியாபாரம் செய்து வந்துள்ளனா்.
வழக்கம்போல் இருவரும் துவரங்குறிச்சி பகுதி கடைகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று மிட்டாய் விநியோகம் செய்துவிட்டு திருச்சி செல்ல திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தனா்.
அப்போது மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த தென்னூா் சின்னசாமி நகா் மை. சா்தாா் (55), பீமா நகா் கை. காஜா மைதீன்(69) ஆகியோா் வந்த காா்இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் முகமதுஅலி, சாதிக்அலி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் சடலங்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

