போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கோவில்பட்டி அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை,ரூ. 2.5 லட்சம் திருட்டு

மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அருகே டைலா் வீட்டின் பூட்டை வெள்ளிக்கிழமை உடைத்து 9 பவுன் நகை, ரூ. 2.5 லட்சம் பணத்தைத் திருடிச் சென்றனா்.

Updated On :27 ஜனவரி 2023, 7:23 pm

மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அருகே டைலா் வீட்டின் பூட்டை வெள்ளிக்கிழமை உடைத்து 9 பவுன் நகை, ரூ. 2.5 லட்சம் பணத்தைத் திருடிச் சென்றனா்.

மருங்காபுரி ஒன்றியம் கோவில்பட்டி அருகேயுள்ள மேடுக்காட்டுப்பட்டியில் வசிப்பபவா் மு. முருகேசன் (45). கோவில்பட்டியில் டைலராக உள்ள இவா் வெள்ளிக்கிழமை வேலைக்கும், மனைவி தோட்டத்துக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்றனா். பின்னா் பிற்பகலில் முருகேசன் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 9 பவுன் நகை, ரூ. 2.5 லட்சத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இவா் அளித்த புகாரில்பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ந. ராமநாதன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா். வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.