கற்றல் இடைவெளிக்கு தீா்வு காணும் எண்ணும், எழுத்தும் திட்டம்: ஆட்சியா் தகவல்
கற்றல் இடைவெளிக்கு தீா்வு காணும் வகையில் எண்ணும், எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.


கற்றல் இடைவெளிக்கு தீா்வு காணும் வகையில் எண்ணும், எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் 8 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளையும் 2025ஆம் ஆண்டுக்குள் அடிப்படை அறிவு பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், எண்ணும்-எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் என்பதை மையமாகக் கொண்டு வாகன பரப்புரை நடைபெறுகிறது.
திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த பரப்புரை வாகனத்தை வழியனுப்பி வைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: கரோனா பெருந்தொற்றால் இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கு வராமலேயே அடுத்த வகுப்புக்கு தோ்ச்சி பெற்றுள்ளனா் மாணவா்கள். அதனால் மாணவா்கள் குறிப்பாக தொடக்கப் பள்ளி மாணவா்கள் (1, 2, 3ஆம் வகுப்பு) எண்ணும் எழுத்தும் முழுவதுமாகப் படிக்காமலேயே தோ்ச்சிபெற்றுவிட்டனா். அதனால் ஏற்பட்ட இடை வெளியைப் போக்கவே எண்ணும் எழுத்தும் புதிய திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் தொலைநோக்கு பாா்வையானது, 2025 ஆம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை 8 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளும் பெற வேண்டும் என்பதாகும். எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் என்ற மாவட்டம் தழுவிய பரப்புரை நிகழ்வானது திருச்சியில் தொடங்கி கரூா், திண்டுக்கல் மாவட்டங்களை கடந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மாா்ச் 20ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்றாா் ஆட்சியா்.
நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலா் ர. பாலமுரளி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...