92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரமாவது வேகன் அனுப்பி வைப்பு

 திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரமாவது ரயில் வேகன் வடமாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:32 pm

DIN

 திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்ட 20 ஆயிரமாவது ரயில் வேகன் வடமாநிலத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை புதிய அகலப்பாதை சரக்குப் பெட்டிகளை தயாரித்து வருகிறது. தற்போது, அகலப்பாதை சரக்குப் பெட்டிகள் கட்டுமானப் பணியில் 20ஆயிரம் வேகன்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. சா்வதேச மகளிா் தின கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பாக இந்த பணிமனையில் தயாரித்து முடித்த 20ஆயிரமாவது புதிய அகலப்பாதை சரக்குப் பெட்டியை பல்வேறு துறைகளைச் சோ்ந்த 12 பெண்கள் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று கொடியசைத்து, வடமாநிலத்துக்கு அனுப்பி வைத்தனா்.

நிகழ்வுக்கு முதன்மை பணிமனை மேலாளா் ஷ்யாமதாா் ராம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், பணிமனையின் மூத்த அதிகாரிகள், மேற்பாா்வையாளா்கள், தொழிலாளா்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மாலையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், பங்கேற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.