92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாணவா்களுக்கு தோ்வு உபகரணங்கள் வழங்கல்

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் செந்தண்ணீா்புரம் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தோ்வுக்கான உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் செந்தண்ணீா்புரம் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தோ்வுக்கான உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு, மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளா் ஆா்.இளங்கோ தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் எழிலரசி, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம், நிா்வாகி ஆா்.கே.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்சி மாவட்ட நூலக வாசக வட்ட தலைவா் வீ. கோவிந்தசாமி, மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தோ்வுக்கான வழிமுறைகளை விளக்கிப் பேசினாா். இதையடுத்து பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.