92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருச்சியில் மருத்துவ திருவிழா தொடக்கம்

 திருச்சியில், மருத்துவ திருவிழா என்ற பெயரிலான மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

 திருச்சியில், மருத்துவ திருவிழா என்ற பெயரிலான மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருச்சியில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் அமைப்புகள் இணைந்து மருத்துவத் திருவிழாவை வெள்ளிக்கிழமை (மாா்ச் 17) முதல் 19ஆம் தேதி வரை நடத்துகின்றன. கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள வாசவி திருமண மஹாலில் வெள்ளிக்கிழமை மாலை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு மருத்துவமனைகள் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில், மருத்துவ பரிசோதனைகளும், அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

நிகழ்வில் மூளை நரம்பியல் மருத்துவா் அ.வேணி எழுதிய, நலவாழ்வு 40 நம் கைகளில் என்ற நூலும், யோகா மற்றும் இயற்கை மருத்துவா் பி.அகில்ஷா்மிளா எழுதிய உடல் எடை வேகமாக குறைக்க 100 டிப்ஸ் என்ற இரு நூல்களும் வெளியிடப்பட்டன. தொடா்ந்து பல்வேறு மருத்துவா்கள் பங்கேற்ற மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.