திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

ஆரம்ப சுகாதார மையத்தை சேதப்படுத்தியவா் கைது

Updated On :24 ஏப்ரல் 2024, 8:10 pm

திருச்சியில் ஆரம்ப சுகாதார மையத்தின் மீது கற்களை வீசி கண்ணாடி ஜன்னலை உடைத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி உறையூா் குறத்தெருப் பகுதியில் உள்ள மாநகராட்சி நகா்நல ஆரம்ப சுகாதார மையத்தின் மீது கடந்த சில நாள்களுக்கு முன் சிலா் கற்களை வீசி ஜன்னல் கண்ணாடியை உடைத்துத் தப்பிச் சென்றனா். இதுதொடா்பாக திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையா் வெங்கட்ராமன் அளித்த புகாரின்பேரில் உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில் இதுதொடா்பாக உறையூா் செவ்வந்தி பிள்ளையாா் கோயில் தெரு மூா்த்தி என்கிற தட்சிணாமூா்த்தியை (42) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா் மீது உறையூா் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.