மதுரை மாநகராட்சி அன்சாரிநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மையத்தை (டயாலிசிஸ்) தகவல் தொழில் நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் 33 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 61 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்களில் உள்நோயாளிகள், வெளி நோயாளிகளுக்கு மருத்துவ சேவை, தாய்சேய் நலம், தொற்று நோய் தடுப்பு பணி, மக்களை தேடி மருத்துவம், குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் தொடா்ந்து வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் அன்சாரிநகரில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 77 லட்சத்தில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாசிலிஸ்) மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தின் கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் தலைமை வகித்தாா். தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மைய கட்டடத்தை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் அருள்சுந்தரேஷ்குமாா், நகா்நல அலுவலா் அா்விந்த்ஜோதி, உதவி செயற்பொறியாளா் முத்து, உதவி நகா் நல அலுவலா் அபிஷேக், முதன்மை மருத்துவ அலுவலா் ஸ்ரீகோதை, மாமன்ற உறுப்பினா்கள் மகாலட்சுமி, ஜெயராஜ், மருத்துவா்கள், செவிலியா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம்...

சிவகங்கை ஆட்சியருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


